ரூ.62¼ லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள்


ரூ.62¼ லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள்
x

வாணியம்பாடியில் ரூ.62¼ லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள் கட்டும் பணியை நகரமன்ற தலைவர் சொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வி.எம்.சி. காலனி பகுதியில் ரூ.26 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள் கட்டும் பணி மற்றும் வாரச்சந்தை மைதானம் வளாகத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமை தாங்கினார். பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். பணி ஆய்வாளர் அன்பரசு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் கலந்துகொண்டு கட்டிட பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதிகுமார், கலைச்செல்வன், ஷாஹீன் பேகம் சலீம், பல்கீஸ் பேகம், சித்ரா தென்னரசு, அருள், ராஜலட்சுமி, சுபாஷினி மற்றும் நகர துணை செயலாளர் தென்னரசு, நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story