மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவிப்பு


மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவிப்பு
x

மண் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சியில் அடங்கியது செம்பியம்மணலி கிராமம். இங்கு உள்ள செம்பியம்மணலி ஏரியும், விச்சூர் எரியும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கொசஸ்தலை ஆற்றின் வடிநில கோட்ட செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது. மழைக்காலத்தில் புழல் ஏரி நிரம்பி மழை வெள்ளம் வெளியேறும் போது இந்த ஏரிகள் நிரம்பும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரிக்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.

இந்த வரத்து கால்வாயை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை பொதுப்பணி நீர் வளத்துறையினர் அகற்றாமல் உள்ளனர். மேலும் மழைக்காலங்களில் பூண்டி ஏரி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் போது வெள்ளிவாயல், விச்சூர், புதுநகர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகள் மற்றும் தொழிற்போட்டையில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

பொதுமக்கள் பாதிப்பு

இதனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் விச்சூர், புதுநகர் பகுதிகளில் வெள்ளிவாயல், மணலி புதுநகர், சடயங்குப்பம் போன்ற பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதை முதல்-அமைச்சர மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெள்ள சேதங்களை தடுக்கவும் கொசஸ்தலை ஆற்றின் கரையை மேம்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

வெள்ளிவாயல் முதல் சடயங்குப்பம் வரை கொசஸ்தலை ஆற்றின் கரையை மேம்படுத்தும் வகையில் வழுதிகைமேடு செம்பியம்மணலி போன்ற இடங்களில் உள்ள ஏரிகளில் 5,040 கனமீட்டர் சாதாரண மண் எடுத்து கொசஸ்தலை கரையை மேம்படுத்த பல்வேறு துறை ஒப்புதல் வழங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மண் எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மண் எடுக்க முடியாமல்

இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மண் எடுக்க முடியாமல் லாரிகள் திரும்பி செல்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

எங்கள் ஊராட்சியில் 2 ஏரிகள் உள்ள நிலையில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதையும் கால்வாயை சீரமைக்க பொதுப்பணி நீர் வளத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏரியில் மண் எடுக்க வருகின்றனர். மண் எடுக்க முடியாததால் கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் தவித்து வருகின்றனர்.


Next Story