கலந்தாய்வு நடைபெறும் விவரம் வெளியீடு
அரசு கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறும் விவரம் வெளியானது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அன்று விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, என்.சி.சி.யினருக்கு அனைத்து பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 1-ந்தேதி காலை 9 மணிக்கு பிகாம், பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும், மதியம் 1 மணிக்கு பி.ஏ. பொருளாதாரம், வரலாறு பாடப்பிரிவுகளுக்கும், 2-ந்தேதி காலை 9 மணிக்கு பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கும், மதியம் 1 மணிக்கு தாவரவியல், விலங்கியல் பாடபிரிவுகளுக்கும், 5-ந் தேதி காலை 9 மணிக்கு பி.ஏ. தமிழ், வரலாறு பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story