தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிக்கையில் வெளியிட்டது.
சென்னை,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிக்கையில் வெளியிட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழகச் செயலாளர் ராஜசேகரன், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிர்வாகிகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story