புது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேலம்
பனமரத்துப்பட்டி:-
ஆட்டையாம்பட்டி பேரூராட்சி வேலநத்தம் பகுதியில் அமைந்துள்ள புது மாரியம்மன் மற்றும் ஆதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு தீர்த்தக்குடங்கள் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு, ஆதி விநாயகர் கோவிலில் உள்ள கலசங்களுக்கும், புது மாரியம்மன் கோவில் கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆட்டையாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story