பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!
x

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஐதராபாத்,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள அமீர்பெட் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தமிழிசை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.Next Story