புகார் பெட்டி


புகார் பெட்டி
x
ஈரோடு

பழுதான குப்பை வாகனங்கள்

வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் குப்பை அள்ளுவதற்காக 3 மின்சார குப்பை அள்ளும் வாகனங்கள் உள்ளன. இந்த 3 வாகனங்களும் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் தள்ளுவண்டி மூலம் தூய்மைபணியாளர்கள் குப்பைகளை அள்ளி வருகிறார்கள். இது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. உடனே குப்பை சேகரிக்கும் மின் வாகனங்களை பழுது நீக்கி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வெள்ளித்திருப்பூர்.

பராமரிப்பில்லாத சமுதாயக்கூடம்

பவானிசாகரில் கூலீஸ்லைன் என்ற இடத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே சமுதாயக்கூடத்தை சரியாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலு, பவானிசாகர்.

ரோட்டில் பள்ளம்

பவானிசாகரில் கோழிக்கறிக்கடை செல்லும் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இருசக்கர வாகங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானிசாகர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஈரோடு டவுன் 43-வது வார்டு மொய்தீன் வீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி உள்ளதால் சுகாதார கேடு நிலவி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டீசல்செட் அருகில் ரோட்டோரம் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து நடக்கிறது. உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

தெருநாய்கள் தொல்லை'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 8939048888 என்ற 'வாட்ஸ் -அப'் எண்ணில் வந்துள்ள மக்க்ள குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சத்தியமங்கலம் ராஜீவ்நகரில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அவை தெருவில் வருவோர் போவோரை கடித்து குதறி வருகின்றன. இரவு நேரங்களில் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு்க்கொண்டு் குரைக்கின்றன. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் சிரமப்படுகிறோம். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வின், சத்தியமங்கலம்.

----------


Next Story