புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

பணி விரைந்து முடிக்கப்படுமா?

பர்கூர் கிழக்கு மலைப்பகுதி ஈரெட்டி பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அருகில் நீரோடை வழியாக சென்று வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை பெய்து நீரோடையில் தண்ணீர் செல்லும் போது மலைவாழ் மக்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

முருகேசன், தேவர் மலை.

சமூக விரோதிகளின் கூடாரம்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சீனாபுரம் ஊராட்சியில் உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தில் நிழற்குடை உள்ளது. ஆனால் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மது பிரியர்கள் குடித்துவிட்டு் காலி பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கிறார்கள். குப்பைகளும் குவிந்து அசுத்தமாக நிழற்குடை காணப்படுகிறது. இருக்கைகளும் உடைந்து பயணிகள் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே இந்த நிழற்குடையை சுத்தப்படுத்தவும், பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.பழனிச்சாமி, ஆயிக்கவுண்டன்பாளையம்.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அடிக்கடி ஏற்படும் நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை ஒழுங்கு படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

குடிநீர் வசதி வேண்டும்

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தனியார் அமைப்பு சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த குடிநீர் எந்திரம் பழுதாகி அதிக நாட்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வரும் பொதுமக்கள் குடிநீர் வசதி இன்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மெனிஷா, ஈரோடு.

முட்செடிகளுக்குள் குடிநீர் குழாய்

அந்தியூர் அருகே உள்ள செல்லபாளையம் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை சுற்றி உள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்


வீணாகும் குடிநீர்

ஈரோடு நசியனூர் ரோட்டில் உள்ள மாணிக்கம்பாளையம் சுப்பிரமணியன் நகரில் பல மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

வனிதா, ஈரோடு.



Next Story