புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

சாலையில் தேங்கும் சாக்கடை

ஈரோடு-பெருந்துறை ரோட்டில், பெருந்துறை அருகே உள்ள செட்டித்தோப்பு என்ற பகுதியையொட்டி மெயின் ரோட்டில் தண்ணீர் குட்டைபோல தேங்கி உள்ளது. பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் கலந்து இந்த தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும்போது பாதசாரிகள் மீது சாக்கடை தண்ணீர் தெறிக்கிறது. 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சாக்கடை தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செட்டித்தோப்பு.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோபியில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் நாகர்பாளையம் பிரிவு உள்ளது. இங்குள்ள கீரிப்பள்ளம் ஓடையின் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாகர்பாளையம் பிரிவு.

வீணாகும் குடிநீர்

ஈரோடு சூளையில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டில் ஆறு போல் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மாணிக்கம்பாளையம், ஈரோடு.

உடைந்த தரைப்பாலம்

ஈரோடு குப்பைக்காடு பகுதியில் தரைப்பாலம் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. மேலும் அந்தப்பகுதியில் பார்சல் அலுவலகங்கள் இருப்பதால் பார்சல் பொருட்களை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் வியாபாரிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே உடைந்த தரைப்பாலத்தை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

குடிநீர் தட்டுப்பாடு

பங்களாப்புதூர் அருகே புஞ்சைதுறையம்பாளையம் கிராமம் கிறிஸ்தவ ஆலயம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைதுறையம்பாளையம்.


Next Story