புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வடிகால் சீரமைக்கப்படுமா?

சத்தியமங்கலம் பாிசல்துறை வீதியில் உள்ள சாக்கடை வடிகால் உடைந்து கிடக்கிறது. மேலும் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும்போது துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்கவும், வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சாிசெய்யவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சத்தியமங்கலம்

பராமாிப்பின்றி காணப்படும் பூங்கா

கோபிசெட்டிபாளையம் கோசலை நகரில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஆகவே பூங்காவை பராமாிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

ரோடு சீரமைக்கப்படுமா?

ஆப்பக்கூடல் கீழ்வாணி அருகே இந்திராநகரில் உள்ள ரோடு கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிந்து நீண்டநாட்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது அந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சேஷாத்ரிகிருஷ்ணன், இந்திரா நகர், கீழ்வாணி

வர்ணம் பூசப்படுமா?

பவானி-மேட்டூர் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வேகத்தடை உயரம் குறைவாக இருப்பதுடன் முறையாகவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடை முறையாக அமைப்பதுடன் அதன் மீது ஓளிரும் தன்மை கொண்ட வர்ணம் பூச வேண்டும். மேலும் அதன் அருகில் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானி

வழிகாட்டி பலகை

நம்பியூர் கோசணம் அருகே கொளப்பலூர்-நம்பியூர் சாலையில் செல்லிபாளையம் என்ற இடம் உள்ளது. இங்கு நம்பியூர், மூணாம்பள்ளி ஊருக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் பலகை வைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்க பணி நடந்தபோது இந்த பலகை அகற்றப்பட்டது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே பெயர்த்து எடுத்த வழிகாட்டி பலகையை மீண்டும் நெடுஞ்சாலையோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், நம்பியூர்.

குறுகலான ரோடு

பெருந்துறை சீனாபுரம் அருகே கடைபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள சாலை வளைவு குறுகலாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ரோட்டை அகலப்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கடைபாளையம்


1 More update

Next Story