புலியகுளம் கேந்திரிய வித்யாலயா மாணவ-மாணவிகள் 98.1 சதவீத தேர்ச்சி


புலியகுளம் கேந்திரிய வித்யாலயா மாணவ-மாணவிகள் 98.1 சதவீத தேர்ச்சி
x

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி 98.1 சதவீதமும், சூலூர் பள்ளி 97.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றது.

கோயம்புத்தூர்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி 98.1 சதவீதமும், சூலூர் பள்ளி 97.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றது.

சி.பி.எஸ்.இ. தேர்வு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 2021-22-ம் கவ்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஜூன் 15-ந் தேதி நிறைவடைந்தது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் கோவை புலியகுளத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ- மாணவிகள் 98.1 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

இது குறித்து பள்ளியின் தரப்பில் கூறுகையில், புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 163 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில் 161 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 98.1 சதவீத தேர்ச்சி ஆகும். தேஜஸ் என்ற மாணவர் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்றார். அவர் வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களில் 100-க்கும் 100 மதிப்பெண்கள் பெற்றார் என்றனர்.

சூலூர் கேந்திரிய வித்யாலயா

இது போன்று சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இது குறித்து அந்த பள்ளியின் முதல்வர் மேகநாதன் கூறுகையில், எங்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 144 மாணவ-மாணவிகள் எழுதினர். அதில் 140 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.22 சதவீத தேர்ச்சியாகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 197 மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களில் 192 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 97.5 சதவீத தேர்ச்சி அடைந்தனர். 12-ம் வகுப்பில் மாணவி சவுமியா 500-க்கு 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் அலோக் ராஜ் 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story