ஆற்றில் மூழ்கி பம்பு ஆபரேட்டர் சாவு


ஆற்றில் மூழ்கி பம்பு ஆபரேட்டர் சாவு
x

வேட்டவலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பம்பு ஆபரேட்டர்

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பரத் (வயது 32). இவர் சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பம்பு ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் இன்பா, சிபிராஜ், இனியா, மோகன், அஜய்விக்னேஷ்.

இதில் சிபிராஜ் திருவண்ணாமலை அருகே உள்ள கோவில்மேடு என்ற பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை பார்க்க சென்றார்.

அங்கு இடங்களை பார்த்துவிட்டு நண்பர்கள் அனைவரும் நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை செல்வதற்காக கலிங்கலேரி இருந்து ராஜாபாளையம் செல்லும் வழியில் வந்தனர்.

ஆற்றில் மூழ்கி சாவு

அப்போது சொர்பனந்தல் பகுதியில் செல்லும் துரிச்சால் ஆற்றில் சென்ற தண்ணீரில் இனியாவும் பரத்தும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

திடீரென இருவரும் ஆழப்பகுதிக்கு சென்ற தண்ணீரில் மூழ்கினர். கரையில் இருந்த நண்பர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

சத்தத்தை கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story