புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு
x

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு அதிகாலையில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மலைக்கோவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மை தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கீழ் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசை நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story