கழுகுமலை பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
கழுகுமலை சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 10.30 மணியளவில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story