தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது


தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை

அழகர்கோவில்

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் உப ேகாவிலானது மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்னவெங்கடாஜலபதி பெருமாள் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம் மோற்சவ பெருந்திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா தொடங்கியது.

இதில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் காலை 8.35 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம் நாணல் புல், வண்ண பூமாலைகள், மாவிலைகள், பட்டாடைகள் கொடிமரத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டு கட்டப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் நூபுர கங்கை தீர்த்தத்தினால் வேத மந்திரங்களுடன், பூஜைகள் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிக்கும், உற்சவர் பெருமாள் மற்றும் தேவியர்களுக்கும், சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடந்தது. விழாவில், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, உதவி பொறியாளர் கிருஷ்ணன், பேஷ்கார் புகழேந்தி, மேலாளர் தேவராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு பெருமாள் அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

தெப்ப உற்சவம்

திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) காலையில் கிருஷ்ணாவதாரமும், மாலை அனுமார் வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ராமாதாரமும், மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடும், 20-ந் தேதி காலையில் கஜேந்திர மோட்சமும், மாலையில் கருட வாகனத்திலும், 21-ந் தேதி காலையில் ராஜாங்க சேவையும், மாலையில் சேஷ வாகனத்திலும், 22-ந் தேதி காலையில் மோகன அவதாரத்திலும், மாலையில் யானை வாகனத்திலும், 23-ந் தேதி காலையில் சேஷசயனத்திலும், மாலையில் புஷ்ப விமானத்திலும், 24-ந் தேதி காலையில் வெண்ணெய் தாழியும், மாலையில் குதிரை வாகனத்திலும், 25-ந் தேதி காலையில் 9 மணிக்கு மேல், 9.45 மணிக்குள் திருத்தேரோட்டமும் நடக்கிறது.

26-ந் தேதி காலையில் தீர்த்தவாரியும், மாலையில் பூச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருள்வதும் நடைபெறும். 27-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்கும், மாலையில் 6 மணிக்கும் தெப்ப உற்சவமும் நடைபெறும்.28-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியும், நடைபெறும். இத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story