விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்

விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்
x

விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே உள்ள சரபோஜிராஜபுரம் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று(இ-நாம்) 2 டன் கருப்பு கவுனி நெல் கொள்முதல் செய்யப்பட்டு பரிவர்த்தனை நடைபெற்றது. இதன் மதிப்பு ரூ.62,370 ஆகும். இதில் மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.1900-க்கும், குறைந்த பட்சம் விலை ரூ.1800-க்கும் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி, வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story