கறம்பக்குடி அருகே தூய கித்தேரியம்மாள் ஆலய தேர் பவனி...!


கறம்பக்குடி அருகே தூய கித்தேரியம்மாள் ஆலய தேர் பவனி...!
x

கறம்பக்குடி அருகே தூய கித்தேரியம்மாள் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி தூய கித்தேரியம்மாள் ஆலய தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. தினமும் பங்கு மக்கள் சார்பில் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

இதில் கிறிஸ்தவ பெண்கள் தேவ பாடல்களை பாடி கித்தேரியம்மாளை வழிபட்டனர். இன்று இறுதி திருவிழா மற்றும் கித்தேரியம்மாள் தேர்பவனி நடந்தது.

இதையொட்டி அலங்கரிக்கபட்ட ரதத்தில் கித்தேரியம்மாள், குழந்தை ஏசு திருபவனி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து வானவேடிக்கைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவையொட்டி கே.கே.பட்டி பங்குதந்தை சேசுராஜ் தலைமையில் அருட் சகோதரிகள் கலந்துகொண்ட சிறப்பு பிரார்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story