சேலத்தில் தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலய தேர்பவனி


சேலத்தில்  தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலய தேர்பவனி
x

சேலத்தில் தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலய தேர்பவனி நடந்தது.

சேலம்

சேலம்,

சேலம் தம்மண்ணன் ரோடு முல்லை நகரில் தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 44-வது ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அன்னைக்கு செபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், சமபந்தி விருந்தும் நடந்தது. இதையடுத்து சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் பங்கு தந்தை ஜோசப் லாசர், உதவி பங்குதந்தை ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு குழந்தை இயேசு பேராலயத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது. பின்னர் முல்லைநகர், நலம் மருத்துவமனை, ரத்தினசாமிபுரம் வழியாக மீண்டும் முல்லைநகருக்கு வந்தடைந்தது. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story