ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் நேர்த்திக்கடனாக வழங்கினார்

ஆனைமலை  மாசாணியம்மன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் நேர்த்திக்கடனாக வழங்கினார்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் நேர்த்திக்கடனாக வழங்கினார்

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இதேேபால் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாசாணிம்மமன் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதன்படி அமெரிக்காவில் இருந்து பக்தர் சரவண குமார் என்பவர் மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வசதி இல்லாததை கவனித்தார். இதையடுத்து கோவிலில் நேர்த்திக்கடனாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வழங்குவதாக கோவிலில் அம்மனை வேண்டிச் சென்றார். அதன்படி கோவிலில் 1000-ம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கினார். இதையடுத்து கோவிலில் குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. இதில் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தாகம் தணிந்து செல்வதாக தெரிவித்தனர். இந்த சுத்திகரிப்பு எந்திரத்தை ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story