கதர் விற்பனை தொடக்க விழா


கதர் விற்பனை தொடக்க விழா
x

காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு, கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story