ஜெனரேட்டர் மின்சாரம் தாக்கி குவாரி ஊழியர் பலி


ஜெனரேட்டர் மின்சாரம் தாக்கி குவாரி ஊழியர் பலி
x

ஜெனரேட்டர் மின்சாரம் தாக்கி குவாரி ஊழியர் பலியானார்.

திருவண்ணாமலை

தூசி

ஜெனரேட்டர் மின்சாரம் தாக்கி குவாரி ஊழியர் பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் சுரேஷ் (வயது 30). இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றிருந்தார்.

அப்போது அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் கல் குவாரி எந்திரங்கள் செயல்பட வைக்க ஜெனரேட்டர் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டார்.

அவரை சக ஊழியர்கள் மீட்டு காப்பாற்றி காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் தந்தை சீனிவாசன் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story