பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி


பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
x
தினத்தந்தி 8 Aug 2023 3:15 AM IST (Updated: 8 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவில் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. ஒன்றியம், மாவட்டம், மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் இறுதியாக மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. கோத்தகிரி பகுதியை சேர்ந்த 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிக்கு மோகன்குமார் தலைமை தாங்கினார். கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமீலியா, சமூக ஆர்வலர் போஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜு பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர் என்றார். கோத்தகிரி வாசகர் வட்ட செயலர் நாகராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர். முடிவில் கடசோலை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story