நோயாளியை வெறிநாய் கடித்து குதறியதால் பரபரப்பு


நோயாளியை வெறிநாய் கடித்து குதறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:16:30+05:30)

தேன்கனிக்கோட்டையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நோயாளியை வெறிநாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் தினமும் பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலேநட்டி கிராமத்தை சேர்ந்த மல்லப்பா (வயது56) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு ஊருக்கு கோட்டைவாசல் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வெறிநாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கோட்டைவாசல் பகுதியில் வெறிநாய் சுற்றித்திரிவதால் பொதுமக்களை அச்சத்தில் உள்ளனர். மேலும் வெறிநாயை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வெறிநாய் பொதுமக்களை கடித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story