ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ராந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

மருத்துவர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆய்வாளர் சம்பத் வரவேற்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் யோகேஸ்வரன் பேசுகையில், 'வீட்டில் வளர்க்கும் செல்ல விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் இருந்தால் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

ரேபீஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்த உடன் அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கழுவ வேண்டும். வெறி நாய் கடியின் மூலம் பரவும் ரேபீஸ் வைரஸ் மனித மூளையை பாதிக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதில் சுகாதார செவிலியர் கலைவாணி, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய பணியாளர் ரஞ்சினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story