இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர் டாக்டர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் நேருகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செல்லபிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி மற்றும் கால்நடை ஆய்வாளர் வீரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில்வேல், விஜயராணி ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story