2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி


2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
x

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

நாமக்கல்

உலக வெறிநோய் கடி தடுப்பு தினத்தையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதையொட்டி கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் 105 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கால்நடை மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்த இந்த முகாமில் ஏராளமானோர் செல்ல பிராணிகளை அழைத்து வந்து, வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போட்டு சென்றனர்.

இந்த முகாமில் மொத்தமாக 2,634 செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி முகாமில் பங்கேற்ற கால்நடை டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள், உலக ரேபீஸ் நோய்த்தடுப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.


Next Story