இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்


இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
x

கபிலர் மலையில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்-ராஷ்ட்ரிய கிருஷி விகாஷ் யோஜனா 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வெறிநாயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் அருண் பாலாஜி தலைமை தாங்கினார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இதில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் தனவேல் பேசினார். முகாமில் சுகாதாரத் துறை, பிராணிகள் நல வாரியம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், மணிவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், தடுப்பூசி பணியாளர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story