நொய்யல் ரெயில்வே கேட் மீது டிராடர் மோதல்: போக்குவரத்திற்கு தடை


நொய்யல் ரெயில்வே கேட் மீது டிராடர் மோதல்: போக்குவரத்திற்கு தடை
x

நொய்யல் ரெயில்வே கேட் மீது டிராடர் மோதியதில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

ரெயில்வே கேட்

கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக ெரயில்வே பாதை செல்கிறது. இந்த ெரயில்வே பாதை வழியாக இருபுறமும் சாதாரண பயணிகள் ெரயில்கள், விரைவு பயணிகள் ெரயில்கள், சரக்கு ெரயில்கள் என ஏராளமான ெரயில்கள் சென்று வருகின்றன. ெரயில்கள் வரும்போது ெரயில் பாதையின் குறுக்கே இருபுறமும் ெரயில்வே ஊழியர்கள் கேட்டை மூடிவிடுவார்கள். ெரயில்கள் சென்று குறிப்பிட்ட நேரம் கழித்து ெரயில்வே கேட்டை திறந்து விடுவார்கள்.

இந்த ெரயில்வே கட்டியின் வழியாக கோவை, பல்லடம், திருப்பூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு, கொடுமுடி, நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, பழனி, ஈரோடு, கோவை, பல்லடம், வெள்ளகோவில், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள், பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என ஏராளமான வாகனங்கள் தினமும் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

டிராக்டர் மோதல்

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சுமார் 6 மணி அளவில் ஈரோடு மாவட்ட பகுதியில் இருந்து டிராக்டரில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.அப்போது நொய்யல் ெரயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக பயணிகள் ெரயில் செல்வதற்காக கேட்டை மூடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த டிராக்டர் திடீரெ ெரயில்வே கேட் மீதும் மோதியதில் இருபுறமும் இருந்த ெரயில்வே கேட்டு உடைந்து கீழே விழுந்தது. சற்று நேரத்தில் அந்த வழியாக பயணிகள் ெரயில் அதிகவேகமாக வந்து கொண்டிருந்தது. உடனடியாக கரும்பு டிராக்டரை பின்னால் நகர்த்தி விட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்திற்கு தடை

இருபுறமும் இருந்த ெரயில்வே கேட் உடைந்து விட்ட காரணத்தினால் இருபுறமும் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தி விட்டனர். இதனால் நேற்று காலை முதல் தொடர்ந்து ெரயில்வே கேட் சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நொய்யல் வழியாக செல்ல முடியாமல் ெரயில்வே கேட்டு வரை வந்து திரும்பி வெகுதூரம் சென்று ஈரோடு -கரூர் செல்லும் சாலை வழியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக நொய்யல் குருக்குச்சாலை- வேலாயுதம்பாளையம் சாலை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ெரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட ெரயில்வே கேட்டை விரைந்து சீரமைத்து போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story