உணவகத்தில் சாப்பிடாமல் சென்றதால் ஆத்திரம்... சுற்றுலா பயணிகளின் வாகனம் மீது தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ


x

உணவகத்தில் சாப்பிடாமல் சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிப் பிடித்து கண்ணாடியை நொறுக்கிய 4 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

சிதம்பரத்தைச் சேர்ந்த 20 பேர் குற்றாலம் சென்று திரும்பியபோது மதுரை மாங்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட அமர்ந்துள்ளனர். அப்போது சாம்பார், சட்னி உள்ளிட்டவை தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் எதுவும் சாப்பிடாமல் வெளியேறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உணவக ஊழியர்கள் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற வேனை மறித்து கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விக்ரம், சமரஜித், அரவிந்த், ராஜேஷ்கண்ணா ஆகியோரை கைது செய்தனர்.

1 More update

Next Story