மே 21-ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மே 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்த உள்ளார். முன்னதாக கர்நாடகா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பில் பங்கேற்கும் ராகுல் அங்கிருந்து நேராக சென்னை வருகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுகிறது.
Related Tags :
Next Story