ராகுல்காந்தி எம்.பி. ஆக தொடர நடவடிக்கை-ப.சிதம்பரம் வலியுறுத்தல்


ராகுல்காந்தி எம்.பி. ஆக தொடர நடவடிக்கை-ப.சிதம்பரம் வலியுறுத்தல்
x

நாடாளுமன்ற சபாநாயகர் உடனடியாக ராகுல் காந்தியை எம்.பி. ஆக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

சென்னை,

அவதூறு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விசாரணை கோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரையிலும் என ஒவ்வொரு கோர்ட்டிலும் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த வாதத்தை நிரூபிப்பதாக சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய உத்தரவு உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் உடனடியாக ராகுல் காந்தியை எம்.பி. ஆக தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 162 ஆண்டுகளில் அவதூறுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள், நீதிமன்றம் தண்டனை விதித்தது இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கி வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story