காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் -கி.வீரமணி வேண்டுகோள்


காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் -கி.வீரமணி வேண்டுகோள்
x

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் கி.வீரமணி வேண்டுகோள்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஜனநாயகத்துக்கு அறைகூவல் விடுத்து மதவாத சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தும் சக்திகள் தலை தூக்கும் இந்த காலக்கட்டத்தில், ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சியினரின் கருத்து மட்டுமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்ட கொள்கையாளர்களின் எதிர்பார்ப்பும் இதுதான். குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டுவோர், அந்த குடும்பம் ஏற்றுள்ள உயிரிழப்புகள், செய்துள்ள தியாகம் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ராகுல்காந்தி மற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து சென்று, 2024-ல் களத்தில் நிற்க கட்சியை மீண்டும் மறுகட்டமைப்பை உருவாக்குங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கி.வீரமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

29-ந் தேதிய 'விடுதலை' இதழில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில், விநாயகர் சதுர்த்தி சம்பந்தப்பட்டு அப்பகுதி ஆளுமையின்கீழ் வரும் வழக்குகளை ஒரே நீதிபதியிடமே (ஜி.ஆர்.சுவாமிநாதன்) விசாரிக்க வேண்டும் என்பதும், இந்த நீதிபதியின் முந்தைய தீர்ப்புகள் பல, மக்களின் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது பற்றியும், பழைய ஆர்.எஸ்.எஸ். உணர்வாளரான அவரிடம் விநாயகர் வழக்குகள் விசாரணைக்கு வந்தால், உரிய நீதி கிடைக்குமா என்பது பற்றியும் அறிக்கை விடுத்திருந்தோம்.

இந்தநிலையில், அந்த ஆணை கைவிடப்பட்டு, வழமையாக இம்மாதிரி கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி சிவஞானம் விசாரிப்பார் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story