விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை ராகுல் காந்தி பார்வையிட்டார்


விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை  ராகுல் காந்தி  பார்வையிட்டார்
x

படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பார்வையிட்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி இந்த நடைபயணத்தை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார்.கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. நிகழ்ச்சி தொடக்க விழாவில்தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார்.

மதியம் கன்னியாகுமரி வந்தார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், அங்கு அவர் பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.


Next Story