வருவாய் புலனாய்வுத்துறை சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது


வருவாய் புலனாய்வுத்துறை சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது
x

மண்டபம் அருகே வருவாய் புலனாய்வுத்துறை சோதனையில் ரூ. 10 லட்சம் சிக்கியது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் அருகே வருவாய் புலனாய்வுத்துறை சோதனையில் ரூ. 10 லட்சம் சிக்கியது.

வாகன சோதனை

மதுரை மாவட்டம் விரகனூர் ரிங்ரோட்டில் திருச்சி வருவாய் புலனாய்வு இயக்குனரகம் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டபோது ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த கலீல்ரகுமான் என்பவர் 5 கிலோ தங்கம் வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து கலீல்ரகுமானிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது தம்பி நூருல்அமீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவினர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினத்தில் உள்ள நூருல் அமீன் வீட்டுக்கு சோதனையிட சென்றனர்.

ரூ.10 லட்சம்

இதுகுறித்து தகவல் அறிந்து நூருல் அமீன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து அங்கிருந்த அவரது சகோதரியின் கணவர் முகமதுசுனைதீனிடம் விசாரித்து வீட்டில் சோதனையிட்டனர். இதில் ரூ. 10 லட்சம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story