மத்திய அரசை கண்டித்து கிண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து கிண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிண்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை,

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரெயிலை மறித்து நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சென்னை காவல்துறையினர், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் ஆகியோர் கிண்டி ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டம் காரணமாக கிண்டி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story