ரெயில் பயணிகள் பாதுகாப்பு சேவை குழுவினர் ஆய்வு


ரெயில் பயணிகள் பாதுகாப்பு சேவை குழுவினர் ஆய்வு
x

திருச்சி ஜங்ஷனில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு சேவை குழுவினர் ஆய்வு செய்தனர்

திருச்சி

திருச்சி, மே.21-

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று புதுடெல்லியில் இருந்து ரெயில் பயணிகள் பாதுகாப்பு சேவை குழு தலைவர் ஜெயந்திலால் ஜெயின், மற்றும் உறுப்பினர்கள் பிரமோத் குமார் சிங், மோகன்லால் கரிகார் ஆகியோர் வந்து இருந்தனர். இந்த குழுவினர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையம், நடைமேடை, கழிவறை, காத்திருப்பு அறை, உணவகங்களில் ஆய்வு செய்தனர். அதே போல ரெயில் நிலையத்தில்சுத்தமானகுடிநீர்வழங்கப்படுகிறதா, நிறை குறைகள் என்ன என்பது குறித்து ரெயில் பயணிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் அந்த குழுவினர் நிருபர்களிடம் கூறும்போது, திருச்சி ரெயில் நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் சிறப்பான நடவடிக்கைகளால் ரெயில்வே நிர்வாகம் மேம்பட்டு வருகிறது, தற்போது காரைக்குடியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரெயில் திருச்சியிலிருந்து இயக்க பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருச்சி முதல் தஞ்சை பயணிகள் ரெயில் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை குறைக்க ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய தீர்வு எட்டப்படும் என்றார். பின்னர் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனீஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளிடம் பயணிகள் பாதுகாப்பு சேவை குழுவினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். அப்போது, உடன் திருச்சி ரெயில்வே உதவி வணிக மேலாளர் சந்திரசேகர், நிலைய மேலாளர் விருதாச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story