ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பதவியேற்பு


ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பதவியேற்பு
x

ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பதவியேற்றார்

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் பாபு. இவர் வதோதராவில் உள்ள ரெயில்வே தேசியப்பள்ளியின் மூத்த பேராசிரியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, மதுரை கோட்ட கூடுதல் மேலாளராக தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தின் தலைமை என்ஜினீயராக (டிராக் மெஷின்) பணியாற்றி வந்த சி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முறைப்படி மதுரை கோட்ட கூடுதல் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். சிவில் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கட்டமைப்பு என்ஜினீயரிங் முதுநிலை படிப்பை சென்னை ஐ.ஐ.டி.யில் முடித்தார். இந்திய ரெயில்வே என்ஜினீயர் பணித்தேர்வில் 2000-வது ஆண்டில் தேர்ச்சி பெற்று கடந்த 2002-ல் பணியில் சேர்ந்தார். முதுநிலை கோட்ட என்ஜினீயர், துணைத்தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலர், துணைத்தலைமை என்ஜினீயர் (கட்டுமானம்), பாலங்களுக்கான தலைமை என்ஜினீயர், ரெயில் பாதை மேலாண்மை அமைப்பு முதன்மை என்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் சர்வதேச தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளிலும் இந்திய ரெயில்வே சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கோட்ட மேலாளர் அனந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு மதுரை கோட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story