திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மதுரை கோட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓவர் டைம் அலவன்சு வழங்க வேண்டும். ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ரெயில்வே ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


1 More update

Next Story