ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில், திண்டுக்கல் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரெயிலை இயக்க அனுமதித்த மத்திய அரசை கண்டிப்பது, அந்த ரெயிலை மீண்டும் ரெயில்வே நிர்வாகம் மூலம் இயக்க வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் டி.ஆர்.இ.யூ. சங்கம் சார்பிலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிளை செயலாளர் காட்டுராஜா தலைமையில் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழனி ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சுற்றுலா என்ற பெயரில் கோவை-ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலை தனியார் இயக்க அனுமதிப்பதை கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story