ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல், பழனியில் மத்திய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் திண்டுக்கல் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

இதில் சங்கத்தின் மதுரை கோட்ட தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் கிளை உதவி செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதேபோல் பழனி ரெயில்நிலையம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பழனி கிளை தலைவர் நாசர்தீன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story