ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யு.- சி.ஐ.டி.யு. ரெயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. என்ஜினீயரிங், டிராபிக், சிக்னல் துறையின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதவி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜூ கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் ஆறுமுகம், சகாய வில்பட், குமார், ரமேஷ்குமார், ஜெயக்குமார், ராஜ்மோகன், முருகன் மற்றும் ராமமூர்த்தி, சிவா, ஆழ்வார், பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story