ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை, தூத்துக்குடி தட்சண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று அங்குள்ள ரெயில்வே உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ரெயில்வே கேட்டுகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்த கூடாது. ரெயில்வே கேட்டுகளில் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட இணை செயலாளர் ராஜூ, கோட்ட பொருளாளர் சரவணன், உதவி செயலாளர் சவுந்தரராஜன், கிளை பொருளாளர் ஜோதிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிளை உதவி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






