லாரி மோதி ரெயில்வே கேட் சேதம்


லாரி மோதி ரெயில்வே கேட் சேதம்
x

லாரி மோதி ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி ரெயில்வே கேட் நேற்று முன்தினம் இரவு ரெயில் வருகையின் போது மூடப்பட்டது. ரெயில் சென்றதும் மீண்டும் கேட் முழுமையாக திறப்பதற்குள் நாகர்கோவிலில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்த லாரி ரெயில்வே கேட்டின் இரும்பு தடுப்பு குழாய்களின் மீது மோதி சேதம் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டது. சேதம் அடைந்த இரும்பு குழாய் மின்சார ரெயிலுக்குரிய உயர் மின்னழுத்த கம்பியில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story