ரெயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய மர்ம நபர்கள்


ரெயில்வே கேட் கீப்பர் அறையை சூறையாடிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 22 Jun 2023 8:05 PM GMT (Updated: 23 Jun 2023 10:19 AM GMT)

நாங்குநேரி அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையை மர்மநபர்கள் சூறையாடினார்கள். அந்த அறைக்கு தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையை மர்மநபர்கள் சூைறயாடினார்கள். அந்த அறைக்கு தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்வே கேட்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி- செங்குளம் ரெயில் பாதை இடையே நெடுங்குளத்தில் ெரயில்வே கேட் உள்ளது. இங்கு விஷ்ணு (வயது 32) என்பவர் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இந்த கேட் அருகில் அவர் பணி செய்யும் அறையும் உள்ளது.

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ெரயில்களும் இந்த வழியாக செல்வதால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு, திறக்கப்படுவது வழக்கம். மேலும் நெடுங்குளம், தாழைகுளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த ெரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

தீவைத்து எரிக்க முயற்சி

நேற்று முன்தினம் நள்ளிரவில் விஷ்ணு தனது அறையில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் மதுபோதையில் வந்தனர். அவர்கள் திடீரென்று அத்துமீறி ஆயுதங்களுடன் அறையில் புகுந்தனர்.

அங்கிருந்த விஷ்ணுவை மிரட்டி தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினார். எனினும் அந்த அறையை மர்மநபர்கள் சூறையாடினர். இதில் 2 ெதாலைபேசிகள் சேதமடைந்தன. மேலும் தங்களது கையில் வைத்திருந்த பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை அறையில் ஊற்றி தீவைத்து எரிக்க முயன்றனர். அந்த சமயத்தில் அங்கு ஆட்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு விஷ்ணு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயா அருள்பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சூறையாடப்பட்ட கேட் கீப்பர் அறையை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ரெயில்வே கேட் கீப்பர் அறை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story