ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
கோவை- வடகோவை இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை
கோவை ரெயில் நிலையம் மற்றும் வடகோவை ரெயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன. இதில் கோவை ரெயில் நிலையம் மற்றும் வடகோவை ரெயில் நிலையம் இடையே உள்ள இரட்டை தண்டவாள பரா மரிப்பு பணிகள் தொடங்கியது.
இதற்காக தண்டவாளத்தில் போடப்பட்டு உள்ள ஜல்லி கற்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டன. அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என கண்டறிந்து சரி செய்யும் பணியில் 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை- வடகோவை இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு நவீன கருவிகள் உதவியுடன் பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் போடப்பட்டது.
தற்போது இந்த தண்டவாளத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை வருகிற 9-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.