நாமக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் வசதி குழுவினர் ஆய்வு


நாமக்கல் ரெயில் நிலையத்தில்  ரெயில்வே பயணிகள் வசதி குழுவினர் ஆய்வு
x

நாமக்கல் ரெயில் நிலையத்தை ரெயில்வே பயணிகள் வசதி ஆய்வுக்குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் ரெயில் நிலையத்தை ரெயில்வே பயணிகள் வசதி ஆய்வுக்குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குழுவினர் வருகை

மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் ரெயில்வே பயணிகள் வசதி ஆய்வுக்குழு (பி.ஏ.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த குழு உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.

அப்போது ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்து, கமிட்டி உறுப்பினர்கள் ரெயில்வே துறைக்கு பரிந்துரைகளை அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் ரெயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

முன்பதிவு வசதிகள்

இந்த நிலையில் இந்திய ரெயில்வே பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கோதல்லா உமாராணி, கைலாஷ் லட்சுமன் வர்மா, திலிப்குமார் மாலிக், அபிஜித் தாஸ் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் உள்ள சுகாதார வசதிகள், பயணிகள் ஓய்வறை வசதி, ரெயில் பிளாட்பாரங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

நாமக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். நாமக்கல் ரெயில் நிலைய அதிகாரிகள், அந்த குழுவினரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதேபோல் இந்த குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

1 More update

Next Story