தானியங்கி எந்திரத்தில் வழங்கப்படும் ரெயில்வே டிக்கெட் தமிழ் மொழியில் அச்சிட வேண்டும்


தானியங்கி எந்திரத்தில் வழங்கப்படும் ரெயில்வே டிக்கெட்                     தமிழ் மொழியில் அச்சிட வேண்டும்
x

தானியங்கி எந்திரத்தில் வழங்கப்படும் ரெயில்வே டிக்கெட் தமிழ் மொழியில் அச்சிட வேண்டும் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஈரோடு மாவட்ட துணைத்தலைவரும், தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

ரெயில் நிலைய முன்பதிவு டிக்கெட் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அச்சிடப்படுகிறது. ஆனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி டிக்கெட் எந்திரத்தில் வரும் ரெயில்வே டிக்கெட்டில் விவரங்கள் தமிழ் மொழியில் அச்சிடப்படுவதில்லை. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே டிக்கெட் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஆங்கில மொழி படிக்க தெரியாத சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தமிழ் மொழியில் டிக்கெட் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தானியங்கி டிக்கெட் எந்திரத்தில் வழங்கப்படும் டிக்கெட்டில் தமிழ் மொழியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.


Related Tags :
Next Story