ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை

பா.ஜ.க. அரசு தேர்தலுக்காக பல்வேறு பொய்யான வாக்குறுதிகள் அளித்ததாக கூறி நேற்று நாடு முழுவதும் ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் கார்த்திக் சங்கிலி முன்னிலை வகித்தார். துணை பொது செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் சங்கரநாராயணன், சி.ஐ.டி.யூ. இணைத்தலைவர் லெனின், அகில இந்திய ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்கத்தின் இணை செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசினர். அப்போது, இந்தியா முழுவதிலும் சுமார் 3 லட்சம் ரெயில்வே பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக 92 ஆயிரம் பணியிடங்களை மத்திய அரசு சரண்டர் செய்துள்ளது. ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி. மூலம் உடனடியாக தேர்வுகள் நடத்தி காலியிடங்களை நிரப்ப வேண்டும். மதுரை, ராமேசுவரம் பராமரிப்பு பணிமனைகளை சரிசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ரெயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர். வினோத்பாபு நன்றி கூறினார்.


Next Story