பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது


பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது
x

பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அவதிப்பட்டனர்.

திருப்பூர்


பல்லடத்தில் கொட்டித்தீர்த்த மழையால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அவதிப்பட்டனர்.

பல்லடம்

பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. சுமார் 45 நிமிடம் பெய்த இந்த மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே பல்லடம் பகுதியில் உள்ள, அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர்

இதற்கிடையே மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வெளியே வர முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் உடனிருப்பவர்கள், பார்வையாளர்கள் வெளியே வர முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வளாகத்திற்குள் புகுந்துள்ள வெள்ள நீரில் சாக்கடை கழிவுகளும் கலந்துள்ளதால் சுகாதாரமற்ற சூழ்நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story