காரைக்குடியில் திடீர் மழை


காரைக்குடியில் திடீர் மழை
x

காரைக்குடியில் திடீர் மழை பெய்தது.

சிவகங்கை

காரைக்குடி,

கோடைக்கால அக்னி நட்சத்திர வெயில் முடிந்த நிலையிலும் கூட சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதேபோல் காரைக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக காலை முதல் மதியம் வரை வெயில் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு திடீரென வானம் கருமேக கூட்டமாக மாறிய நிலையில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் முக்கியமான இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் மின் ஊழியர்கள் அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர். நேற்று மாலை திடீரென மழை பெய்து மக்களை குளிர செய்ததால் இரவு முழுவதும் குளுமையான நிலை நீடித்தது.


Next Story